/* */

பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
X

சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்கா, சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், சாத்தனூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜூ, வேளாண்மை இணை இயக்குநர் முருகன், திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம், அரசு அலுவலர்கள், பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் பேசுகையில் விவசாய பாசனத்திற்கு 90லிருந்து 100 நாட்கள் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தான் பயிர் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் குறைந்தது 90 நாட்களாவது அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.மேலும் அவர்கள் தெரிவிக்கையில், சாத்தனூர் அணை நீண்டநாட்களாக தூர்வாரப்படாமல் இருப்பதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில்லை என்றும் இது குறித்து மாவட்ட ஆட்சியர், சாத்தனூர் அணை தூர்வார அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் கிளை கால்வாய்களை 100 நாட்கள் வேலையாட்களை பயன்படுத்தி தூர்வார மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசாணை வந்தவுடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Updated On: 12 Feb 2021 6:00 AM GMT

Related News