/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். 

நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். மொத்தம் ஏழு லட்சத்து 28 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வெளியிட அறிவுறுத்தியிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சட்டமன்ற வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்புடைய ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சி மற்றும் நெல்லை மாவட்டத்தின் களக்காடு பேரூராட்சி தவிர்த்து 17 பேரூராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள 370 வார்டுகளுக்கு வாக்காளர்களை வார்டு வாரியாக, தெருவாரியாக கண்டறிந்து இணையதளம் மூலமாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு:- நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி இரண்டு நகராட்சி, 17 பேரூராட்சிகளில் மொத்தம் 370 வார்டுகள் அமையப் பெற்றுள்ளதாகவும், நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 342 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 957 பேரும், இதர பாலினத்தவர்கள் 49 பேர் என மொத்தம் ஏழு லட்சத்து 28 ஆயிரத்து 348 பேர் உள்ளனர் என தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக 902 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

Updated On: 9 Dec 2021 2:24 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்