/* */

12 வயது இளம் இயக்குநரின் ஈவிஏ படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது

12 வயதில் 4 விருதுகளைப் பெற்ற இளம் இயக்குனரின் ஈவிஏ தமிழ் திரைப்படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

12 வயது இளம் இயக்குநரின் ஈவிஏ படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது
X

ஈவிஏ படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நெல்லையில் வெளியிடப்பட்டது.

EVA படத்தின் டைரக்டர் மாஸ்டர் ஆஷிக் ஜீனோ 12 வயதே ஆன இளம் இயக்குனர். இவர் இதுவரை (பிடிகா, விலா, பசி, பிலிப், Survival, the rule of peace, ஆகிய ஆறு குறும்படங்கள் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முதல் குறும்படம் தீபிகா படம் கேரளாவில் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு படமாக பேசப்பட்டதுடன் இந்தியாவில் இளம் இயக்குனர்களுக்கு வழங்கப்படும் URF ( Universal Record Forom ) ரெக்கார்டையும் பெற்றார்.

இவர் இயக்கிய 6 குறும்படங்களில் மூன்று படங்கள் சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது. அதுபோக 5 இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ்களுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் ஈவிஏ எனும் முழுநீளப் படத்தை டைரக்ட் செய்துள்ளார். இவரின் வயதோ 12, பெற்ற விருதுகளோ 4 அவர்களின் திறமையை கண்டு RODHA PRODUCTIONS தயாரித்துள்ள EVA இப்படத்தை தமிழில் ஈவிஏ என்று மொழியாக்கம் செய்து K.K.தேவர் பிலிம்ஸின் முதல் படமாக மிக விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதனையொட்டி இன்று இப்படத்தின் டீசர் மற்றும் First Look போஸ்டரை திருநெல்வேலியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

ஈவிஏ படம் குறித்து இளம் வயது இயக்குனர் ஆஷிக் சீனு கூறியதாவது:-

நான் கேரளாவில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை ஆறு குறும்படங்கள், ஒரு ஆவணப்படம், இரண்டு வணிகரீதியான படங்களை இயக்கியுள்ளேன். தற்போது இயக்கியுள்ள ஈவிஏ தமிழ் படம், தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். நல்ல நம்பிக்கை உள்ளது. மக்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்தப் படத்தை இயக்குவதற்கு கடினமாக உழைத்து உள்ளேன். வருங்காலத்தில் மிகப்பெரிய டைரக்டராக வர வேண்டும். மேலும் மேலும் அதிக படங்கள் இயக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

EVA படத்தின் பாடல், திரைத்கதையை ஜுனு சேவியர் எடப்பள்ளி எழுதியுள்ளார். இசை IM சாகீர், இப்படத்தின் தமிழ் விநியோகஸ்தர் K.K.DEVER Films K.கிருஷ்ணமூர்த்தி, K. கலை செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 11 Sep 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
  10. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்