/* */

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்: பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரம் நினைவு சின்னம் அமைக்க பல்வேறு கட்சிகள் கோரிக்கை.

HIGHLIGHTS

தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்: பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி
X

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக நெல்லை சந்திப்பு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்த போது பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி தப்பிக்க முயன்றனர்.

அப்போது 17 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி இந்து மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி, சிபிஐ, கம்யூனிஸ்ட், ஆதித்தமிழர் பேரவை, பிஜேபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தொழிலாளர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்கிடையில் கொரோனா கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகளில் ஐந்து நபர்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த வர வேண்டும். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வரவேண்டும், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 23 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  2. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  3. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  4. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?