/* */

தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஓய்வூதியர்கள் மாணவர்கள் தன்னார்வலர்கள்

தாமரபரணி சுத்தப்படுத்தும் பணியில் தாமிரபரணி நதி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வீடுவீடாக வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஓய்வூதியர்கள் மாணவர்கள் தன்னார்வலர்கள்
X

தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக வீடு வீடாகச் சென்று தாமிரபரணி நதி பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் வீடுவீடாக வழங்கப்பட்டது.

தூய பொருநை நம் நெல்லைக்கு பெருமை. தாமரபரணி சுத்தப்படுத்தும் பணி மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஓய்வூதியர்கள், பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

தூய பொருநை நம் நெல்லைக்கு பெருமை என்ற தாரக மந்திரத்தோடு மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆலோசனையின் அடிப்படையில் மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக் கரையோரம் சுத்தப்படுத்தும் நலப் பணி, மற்றும் வீடு வீடாகச் சென்று நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் கொடுத்தல், ஓட்டு வில்லை ஒட்டுதல் மற்றும் தூய பொருநை நம் நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேச்சு, பாட்டு, ஓவியப்போட்டி, கோலப் போட்டி நடைபெற்றது.நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கம், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம்மேல் நிலைப் பள்ளி மாணவ- மாணவியர், தன்னார்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

நம் தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் சாமி. நல்ல பெருமாள் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் முனைவர் நல் நூலகர் முத்துகிருஷ்ணன், சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை திட்ட அலுவலர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் சீதாராமன், செயலாளர் சங்கரநாராயணன், பிரச்சார செயலாளர் வெங்கடாசலம், மகளிரணி மண்டல செயலாளர் தேவிகா, மகளிர் அணி செயலாளர் விஜி, மகளிர் அணி துணைத் தலைவர் பொன்னம்மாள் மற்றும் வேதிக் பள்ளி மாணவ- மாணவியர் பெருந்திரளாக கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டார்கள்.

நிகழ்வில் கோட்டாட்சியர் இரா.சந்திரசேகர், துணை ஆட்சியர் உஷா, தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர் குமார் சங்கரன், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் சூரிய பிரபா, மணிகண்டன், தலையாரி முருகன் மற்றும் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தாமிரபரணி கரையோரம் குப்பைகள் அகற்றப்பட்டு, முட்கள் வெட்டப்பட்டு தாமிரபரணி நதிக்கரை ஓரம் சுத்தப்படுத்தப்பட்டது.

நதி கரையோரம் வாழும் மக்கள் தொடர்ந்து தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்காக வீடு வீடாகச் சென்று தாமிரபரணி நதி பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் வீடுவீடாக வழங்கப்பட்டது. தாமிரபரணி நதி பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டு வில்லைகள் வீடுகள்தோறும் ஒட்டப்பட்டது. பொதுமக்கருக்கு கோலப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகள் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயிலில் நடைபெற்றது.

போட்டி ஒருங்கிணைப்பாளராக முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன், நடுவர்களாக கங்கைகொண்டான் அரசு மகளிர் பள்ளி தமிழாசிரியர்.மு. சுப்புலட்சுமி, புனித இன்னாசியார் மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியை ஜெசி, மு.ந.அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் ஓவியர் பொன் வள்ளிநாயகம், கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை பி. சுப்புலட்சுமி, வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஆகியோர் நடுவராக செயல்பட்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிறைவாக ஓய்வூதியர் சங்க மகளிரணி மண்டல செயலாளர் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவிகா நன்றி கூறினார்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 26 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு