/* */

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிப்பு; சாலையாேர வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் மாற்று இடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிப்பு; சாலையாேர வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு
X

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் சாலையோர கடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்து தரக்காேரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் சார்பில் மனு அளித்தனர்.

நெல்லை மாநகர பகுதிகளில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகள் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் குறிப்பிட்டிருந்த தாவது:-

கடந்த 40 வருட காலமாக நெல்லை மாநகர் பகுதிகளான சந்திப்பு, டவுண் வடக்கு ரதவீதி, கீழரதவீதிகளில் உள்ள சாலை ஓரங்களில் பழங்கள், பனியன், ஃபேன்ஸி மற்றும் பல பொருட்களை சில்லரை வியாபாரம் செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் தங்களது குடும்பம் நடைபெறுகிறது. எங்கள் வியாபாரம் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடங்கிவிட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம்.

இந்த நிலையில் நெல்லை மாநகரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் எங்களது தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என அச்சப்படுகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனாலும் எங்கள் குடும்ப ஜீவனாம்சம் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தடையின்றி நடைபெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் உதவிட வேண்டும். மேலும் டவுண் நயினார்குளம் கரைப்பகுதியில் போத்தீஸ் பின்புறம் நிரந்தர கடைகள் அமைத்து கொடுத்து உதவுமாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சாலையோர வியாபாரிகள் சாலையோரங்களில் கடைகள் வைப்பது போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைத்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Updated On: 24 Aug 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  3. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  4. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  8. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  9. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...