இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!

இன்றும் என்றும் எப்போதும்  நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
X

நடிகை திரிஷா (கோப்பு படம்)

நாம் ரஜினி, கமல் பற்றி சிலாகிக்கிறோம். விஜய்- அஜீத் பற்றி ஆச்சரியம் உண்டு.

கமல், ரஜினி, விஜய், அஜித் என இவர்கள் எல்லோரும் குறைந்த பட்சம் 20 வருடங்களாக நாயகனாக வலம் வருகிறார்கள். வயதானாலும் ரசிகர்கள் ஹீரோக்களின் வயதை பொருட்படுத்துவதில்லை. அவர்களைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் வயதாகி விட்டால் நடிகைகளை மறந்து விடுகிறார்கள். அவர்களை கதாநாயகிகளாகக் கொண்டாடுவதில்லை. இதில் விதிவிலக்காக திரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக உச்ச நடிகர்களுக்கு இணையான ஈர்ப்புடன் வலம் வருகிறார். இதற்காக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் தன்னை திரும்பத் திரும்ப புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் அவரை ஏற்கிறார்கள். இதனை சாதிப்பது அவ்வளவு எளிதல்ல.


அவர் மிஸ் சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்ட (1999) அழகிப் போட்டியில் பங்கு பெற்ற மற்ற எல்லாப் பெண்களையும் விட திரிஷா தனித்துவமாகத் தெரிந்தார். அவர் வெற்றி பெறுவார் என எல்லோரும் நம்பினர். அதே போல் வெற்றி பெற்று மிஸ் சென்னை பட்டம் பெற்றார்.

ஆனால் அப்போது முதல் இப்போது வரை, திரிஷாவின் அழகை விட, தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அவருடைய மெனக்கெடல் தான் அவரை காப்பாற்றி வருகிறது. சதுரங்கப்போட்டியில் ராணிக்கு தான் ஆற்றல் அதிகம். அந்த ராணியுடன் அவர் அமர்ந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை, தன் பிறந்த நாளை முன்னிட்டு அவரே எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இன்னும் நான் ராணி தான் என்று அந்த புகைப்படம் வழியாக அவர் நம்பிக்கையுடன் சொல்கிறார். வாழ்த்துகள் திரிஷா! நீங்கள் ராணி தான்!

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!