/* */

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு முககவசம்

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு முககவசம் . நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு முககவசம்
X

முகநூல் நண்பர்கள் குழுவினருடன் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார்

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. ஏழை குடும்பங்கள் மற்றும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பழமையான வீடுகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நெல்லை பேட்டையில் இன்று காலை வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கினார்.பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகக்கவசங்கள் அணிந்த படியே வந்திருந்தனர். முகக்கவசம் அணியாமல் வந்த ஒரு சிலருக்கு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் கூறுகையில், கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அனைவரும் அணிந்து கொள்ள வேண்டும். இந்த பணியை முகநூல் நண்பர்கள் குழுவினர் மிக சிறப்பாக முன்னெடுத்து செல்வதற்கு பாராட்டுக்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிஹர சண்முகம், ஆறுமுகம், பாளையங்கோட்டை சமாதானபுரம் தொழிலதிபர் முருகப்பன், ரெட்சோன் கணபதி மாரியப்பன், அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குனர் மகேஷ், டேனியல் ஆசீர், பேட்டை பவுல் சவேரிராஜ், முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  4. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  5. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  7. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  8. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  9. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்