/* */

தாமிரபரணி நதிக்கரையில் மஞ்சள் பைகளில் விழிப்புணர்வு ஓவியம்

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் மஞ்சள் பைகளில் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சியை பேரவைத் தலைவர் அப்பாவு ஓவியம் வரைந்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தாமிரபரணி நதிக்கரையில் மஞ்சள் பைகளில் விழிப்புணர்வு ஓவியம்
X

விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சியை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஓவியம் வரைந்து தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம், புன்னகாயல் கடலில் கலக்கும் தாமிரபரணி நதி நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் 180 கிலோமீட்டர் தூரம் பாய்ந்தோடி விவசாயம் மட்டுமின்றி 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இந்த நதியை தூய்மைப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தாமிரபரணி நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால பொருட்கள் 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து தமிழர் நாகரிகத்தின் முன்னோடி தாமிரபரணி நாகரிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைமிகு தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் வகையில், நெல்லை மாவட்ட நிர்வாகம் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற திட்டத்தை அமல்படுத்தி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நதிக்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி தாமிரபரணி நதி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி உள்ளிட்டவைகளை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நெகிழி இல்லா நெல்லை மற்றும் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணிக்காண விழிப்புணர்வு ஆகியவை ஒருங்கிணைக்கும் வகையில், நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் பண்பாட்டு துறை இணைந்து நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கல் மண்டபங்களில் வைத்து தமிழக அரசின் நெகிழி ஒழிப்பு திட்டமான மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மஞ்சள் பைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியை தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு ஆகியோர் மஞ்சள் பை கைகளில் ஓவியம் வரைந்து தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஒன்றிணைந்து நெல்லை மாவட்டத்தின் சிறப்புகள், தாமிரபரணி நதியின் பெருமைகள் மற்றும் நெகிழியினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களை வரைந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழ் நாகரிகத்தின் மூத்த நாகரீகமாக திகழும் தாமிரபரணி நாகரீகத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகளை கொண்டு தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி மாவட்ட ஆட்சியர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தாமிரபரணி குறித்த பெருமைகளை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு நிகழ்ச்சிகளை தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கல் மண்டபங்களில் வைத்து தொடங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

தாமிரபரணி நதிக்கரையின் பெருமையை பாதுகாக்கும் வகையிலும் உலக அளவில் தூய்மையான நதி தாமிரபரணி என்ற பெருமையை பெறக் கூடிய வகையிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நதியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி நதிக்கரைகளை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், ட்ரோன் கேமரா மூலம் தாமிரபரணி நதிக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அதனை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், முதற்கட்டமாக 16 எக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 18 April 2022 11:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்