/* */

அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் -ஆணையர் எச்சரிக்கை

திருநெல்வேலி மாநகராட்சியில் அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும் -ஆணையர் எச்சரிக்கை

HIGHLIGHTS

அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் -ஆணையர் எச்சரிக்கை
X

மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் 

திருநெல்வேலி மாநகராட்சியில் அனுமதியும் பெறப்படாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்பபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல்நடவடிக்கை தொடரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையில்... திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான சாலைகளில் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், விளம்பர பலகைகள் (advertisement Board ) பொருத்துவதற்கான உரிய அனுமதி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டு வருகின்றது.

எனவே, மேற்படி சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளுக்கு உரிய அனுமதியினை பெற்ற சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அதற்கான அனுமதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பெற்றிருப்பின் அதற்கான உத்தரவு நகலினை உரிய ஆவணங்களுடன் ஒரு வார காலத்திற்குள் (06.08.2021) மாநகராட்சி மைய அலுவலக திட்டப்பிரிவில் ஒப்படைக்கும்படி தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எவ்விதமான அனுமதியும் பெறப்படாமல் தன்னிச்சையாக சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாக அப்புறப்படுத்தப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் பொருட்கள் எக்காரணத்தினை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.

எனவே, உரிய அனுமதி பெற்று விளம்பர பலகைகள் பொருத்தப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஃ உரிமையாளர்கள் காலதாமதமின்றி உடனடியாக அனுமதி பெற்ற ஆவண நகலினை மாநகராட்சியில் ஒப்படைக்கும் படி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் என தெரிவித்துள்ளார்.

Updated On: 30 July 2021 1:28 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...