/* */

குப்பைகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்த பொது மக்கள்...

வாக்குவாதம்...

HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் அடுத்த வேலாயுத நகரில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைப்பிடித்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வேலாயுத நகரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுவது வழக்கம்.ஆனால் தற்போது வெகு நாட்களாக நகராட்சி குப்பைகளை கொட்டும் இடத்தை தாண்டி பொதுமக்கள் வசிக்கும் தெருக்கள் வரை குப்பைகளை கொட்டி வருகின்றனர் நகராட்சியினர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் குப்பை கிடங்கில் தீப்பற்றி உள்ளது. ஏற்கனவே குப்பைகள் நிறைந்திருந்ததால் தீ மளமளவென பரவியது. உடனடியாக அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.

தீ அணைந்துவிட்டது என்றாலும், குப்பைகளுக்கிடையில் இருந்து கிளம்பிய புகை மண்டலம் அடுத்த பிரச்சினையாக மாறிவிட்டது. இந்தப் பகுதியைச் சுற்றிலும் புகை மண்டலமாக மாறியது இதனால் அப்பகுதியில் சேர்ந்த வசந்தமேரி (73) என்ற மூதாட்டி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் எனபது குறிப்பிடத்தக்கது,

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையர் பார்கவியிடம் புகார் அளித்தபோது இப்பகுதிகளில் இனி குப்பைகள் கொட்ட மாட்டோம் என உறுதியளித்த நிலையில்.

ஆனால் இன்று அப்பகுதியில் குப்பை தட்டுவதற்க்கு வந்த நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தை அப்பகுதி மக்கள் சுமார் முப்பதிற்குமேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர், இதனால் தகவல் அறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் மற்றும் அம்பை காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் எஸ்.பி.CID . ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்,

நீண்ட நேர பேச்சுவார்த்தையின் முடிவில் இனி இப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்ட மாட்டோம் என அம்பை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளார்,


Updated On: 10 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்