/* */

திருச்சி பள்ளி மாணவிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகம்

திருச்சி பள்ளி மாணவிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

திருச்சி பள்ளி மாணவிகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகம்
X

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு  திட்ட வங்கி புத்தகம் வழங்கப்பட்டது.

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்புத்திட்ட வங்கி புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தங்களது பெண் குழந்தைகளுக்காக வைப்பு நிதி செலுத்தி வருகிறார்கள்.இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இந்நிலையில் திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில் செல்வமகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாயிதா பானு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

செல்வமகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகத்தை வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் விமலா பேசுகையில்,சுகன்ய சம்ரிதி திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும்.இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். கணக்கு தொடங்க முடியாத பெற்றோர்களுக்காக தொண்டுள்ளம் படைத்தவர்களும் உதவி வருகிறார்கள். இன்னர் வீல் லேடீஸ் கிளப் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தலைவி கவிதா நாகராஜன் உதவியில் 19 மாணவிகளுக்கு செல்வமகள் திட்டத்தில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.முதிர்வு தொகையை அவர்கள் தங்களது 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம் என்றார்.

Updated On: 15 Dec 2022 7:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!