/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம் தேதிகள் மாற்றியமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை முகாமிற்கான தேதி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம் தேதிகள் மாற்றியமைப்பு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி. (கோப்பு படம்).

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 பணியானது 27-10-2023 முதல் தொங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர்.

மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்று கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்று கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள், இந்திய தேர்தல் ஆணையத்தினால் நடத்தப்பட உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில், 4-11-2023 மற்றும் 5-11-2023 ஆகிய தினங்களில், இரு சிறப்பு முகாம்கள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், வரும் 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய நாட்களில், மேலும், இரு சிறப்பு முகாம்கள் நடைபெற இருந்தது. தமிழக அரசால் தீபாவளி விடுமுறையை ஈடுசெய்ய 18.11.2023 அன்று வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளதின் காரணமாக, 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள 1622 வாக்குச்சாவடிகளிலும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் வாக்குசாவடி அமைவிடங்களில், மேற்கண்ட தினங்களில், படிவங்கள் அளித்து பலன் பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு 73.31 சதவீதம் பதிவாகி உள்ளது. இளம் வாக்காளர்கள் பதிவும் குறைவாக உள்ளது. எனவே படிவம் 6-பி பெற்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணிணை இணைத்திடவும் படிவம் 6 பெற்று புதிய வாக்காளராக பதிவு செய்திடவும் படிவங்கள் பெற்று பலன் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline App என்கிற மெபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி குறித்து பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்; உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Nov 2023 1:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  2. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  3. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  7. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  8. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்