/* */

தூத்துக்குடியில் நவம்பர் 25 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு..

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் நவம்பர் 25 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு..
X

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள், வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள், சீருடைப் பணியாளர் தேர்வுகள் என அனைத்து வகையான அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்கள் இந்த மையத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.

இதேபோல, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, நவம்பர் மாதம் 25 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநர் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Nov 2022 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?