/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்..

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்..
X

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்த்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர குழு சார்பில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பென்ஷன் வழங்கிட வேண்டும், இளம் விதவைகள் அனைவருக்கும் உரிய விசாரணை செய்து பென்ஷன் வழங்க வேண்டும், வறுமைக்கோடு பட்டியலை காரணம் காட்டி பென்ஷன் வழங்குவதை நிறுத்தக்கூடாது, பென்ஷன் நிறுத்தப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநகர குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து, 43 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முத்துமாரி, மாநகர குழு உறுப்பினர்கள் தசலிஸ், காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி புறநகர் குழு சார்பில், பழையகாயல் கடை வீதி பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, புறநகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து சிறப்புரை ஆற்றினார். இதில், சிபிஎம் மூத்த நிர்வாகி பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் விவசாய சங்கம் விவேகானந்தன், புறநகர குழு உறுப்பினர் முனியசாமி, கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம், சமுத்திர பாண்டி, பன்னீர், நந்தகோபால், அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது, பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தையும், ஊர் பொதுமக்கள் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தனது சொந்த பணத்தையும் டெபாசிட் செய்து தவணை முடிந்த நபர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், பழையகாயல், மஞ்சள்நீர்காயல், அகரம், கோவங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

கயத்தாறு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கிராமபுற மக்களின் குடியிருப்புகளுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தி கயத்தாறு அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராசையா தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சீனிப்பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,கடந்த ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் தங்கம், உதவித்தொகை வழங்கிட வேண்டும். ஏழை எளிய குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக அதிக படுத்த வேண்டும். அவர்களுக்கான கூலியை ரூபாய் 300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர். சாலை, வாறுகால், தெரு விளக்கு, மயானம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர வேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஜீவா நகர் கிளைச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். பாரதியார் நகர் கிளைச் செயலாளர் சோமசுந்தரம், கரம்பை விலை செயலாளர் கார்த்தி, தெற்கு புது தெரு கிளைச் செயலாளர் ஆறுமுகம், தோப்பூர் கிளைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், காயாமொழி கிளைச் செயலாளர் சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் கூடுதலாக மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

போராட்டத்தின்போது, 1 ஆவது வார்டு கோசல் ராம் நகர், கனியான் காலனி, கருணாநிதி நகர், பிச்சனார் தோப்பு, 6 ஆவது வார்டு மருத்துவர் காலனி, கீழக்கோட்டை வாசல், தெருக்களின் இரு பக்கமும் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரவும், 6 ஆவது வார்டு நடராஜபுரம், மருத்துவர் காலனி, வாய்க்காலில் படித்துறை அமைத்துக் கொடுத்திடவும் வலியுறுத்தி கோரிக்கை அடங்கிய மனு செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

Updated On: 22 Nov 2022 4:56 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்