/* */

தூத்துக்குடியில் போலி ஆவணம் மூலம் 18 செண்ட் நிலத்தை மோசடி செய்தவர் கைது..

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் போலி ஆவணம் மூலம் 18 செண்ட் நிலத்தை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் போலி ஆவணம் மூலம் 18 செண்ட் நிலத்தை மோசடி செய்தவர் கைது..
X

பைல் படம்.

தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி கோமஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் என்பவரது தந்தை கருப்பசாமி என்பவருக்கு மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்: 149/5-இல் 37 செண்ட் நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த கிராம சர்வே எண்ணிற்கு UDR "அ" பதிவேட்டில் கருப்பசாமி பெயர் பட்டா எண் 121-இன் படி தாக்கலாகி உள்ளது.

கருப்பசாமி மேற்படி நிலத்திற்கு தீர்வை செலுத்தி அனுபவித்து வந்த நிலையில், கருப்பசாமி கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதியும், கருப்பசாமியின் மனைவி கனியம்மாள் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியும்

இறந்துவிட்டனர்.

இதனையடுத்து கருப்பசாமியின் வாரிசுகளான ஹரிராமகிருஷ்ணன், மாரியம்மாள், கந்தசாமி, கதிரேசன், கவிதா, மகேஷ்குமார் ஆகிய 6 பேரும், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலத்தில் வாரிசு சான்றிதழ் பெற்றனர். அதன்படி, 37 செண்ட் நிலமும் மாரியம்மாள், ஹரிராமகிருஷ்ணன், கந்தசாமி, கதிரேசன், கவிதா, மகேஷ்குமார் ஆகிய 6 பேர்களுக்கு கூட்டாக பாத்தியப்பட்டது.

இந்நிலையில் கருப்பசாமியின் வாரிசுகள் 6 பேரும், மாப்பிள்ளையூரணி கிராமம், கோமஸ்புரத்தில் குடியிருக்கவில்லை என்ற விபரத்தினை தெரிந்த கருப்பசாமியின் உடன்பிறந்த சகோதரரான பொட்டல்காடு மல்லிகாநகரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் பூபதி மற்றும் பூபால்ராயபுரம் 5 ஆவது தெருவை சேர்ந்த சங்கரசேகரன் மகன் மகேஷ் ஆகியோர் கூட்டுச்சேர்ந்து மேற்படி கருப்பசாமியன் சொத்தை மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளனர்.

அந்த சொத்தை விற்பனை செய்யும் வகையில் கருப்பசாமியின் பெயரில் உள்ள பட்டா எண் 121-இல் முத்துசாமி பெயரை சேர்த்து போலியான கூட்டுப் பட்டாவை தயார் செய்துள்ளனர். பின்னர், முத்துசாமி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை உயிரோடு இருந்து வந்த நிலையில், அவர் 21.03.2007 அன்று இறந்துவிட்டதாகவும், அவரது மனைவி சிதம்பரம் அதற்கு முன்னரே இறந்து விட்டதாகவும், அவர்களுக்கு பூபதி வாரிசு என்பதற்கு ஆதாரமாக தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்குவது போன்று போலியான வாரிசு சான்றிதழை பூபதி தயார் செய்துள்ளார்.

அதன்பிறகு, கருப்பசாமிக்கு பாத்தியப்பட்ட மாப்பிள்ளையூரணியில் உள்ள 37 செண்ட் நிலத்தில் 18.52 செண்டு நிலத்தை முத்துசாமிக்கு பாத்தியப்பட்டதாகவும், முத்துசாமி இறப்புக்கு பின்னர் 18.52 செண்ட் நிலத்தை மகேஷ் என்பவரின் மணைவி ஷர்மிளா பாக்கியாவுக்கு பூபதி மோசடியாக பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த இடம் முத்துசாமிக்கு பாத்தியம் இல்லை என்பதை தெரிந்திருந்தும், போலியான வாரிசு சான்று, போலியான கூட்டுப் பட்டா ஆகியவற்றை பயன்படுத்தி கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிந்தே ஷர்மிளா பாக்கியா கிரையம் பெற்றுள்ளார்.

அதற்கு, பூபதியின் மனைவி மாலா மற்றும் மகேஷ்க்கு தெரிந்த நண்பரான தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த லட்சுமணன் மகனான லோகநாதன் ஆகியோர்கள் காட்சியாக கையொப்பம் செய்துள்ளர்கள். இந்த நில மோசடி குறித்து ஹரிகிருஷ்ணன் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் செய்தார்.

இதனையடுத்து, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீஸார் நில மோசடி செய்ததாக பூபதியை பொட்டல்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு வைத்து கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

Updated On: 9 Nov 2022 5:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!