/* */

தூத்துக்குடியில் 1.38 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை எம்பி, அமைச்சர்கள் வழங்கினர்

தூத்துக்குடியில் 1.38 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: கனிமொழி எம்பி, அமைச்சர்கள் வழங்கினார்கள்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் 1.38 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை எம்பி, அமைச்சர்கள் வழங்கினர்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 98 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் நேற்று வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள்கள் எம்.சி.சண்முகையா, ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்ட மனுக்களுக்குதான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக உரிய தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்துநமது தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பல்வேறு மனுக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே நமது மாவட்டத்தில் தான் பெறப்பட்ட மனுக்களில் அதிக மனுக்களுக்குதீர்வுகாணப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாணப்பட்டதற்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளுக்கும் மிகமுக்கிய பங்கு உண்டு. இன்றையதினம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சியரின் சமுகபொறுப்புநிதி, தொண்டு நிறுவனம், மாவட்ட பிற்படுத்தபட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு ரூ.3.36 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோறில் ஒருவரை இழந்த 45 குழந்தைகளுக்குதலாரூ.3 லட்சம் வீதம் ரூ.1.35 கோடிநிவாரண உதவிவழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசுபேருந்துகளில் இலவசபயணம் செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் பால், டீசல் விலைகுறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்கள். பெண்கள் வருங்காலங்களில் தங்கள் சொந்தகாலில் நின்று பொருளாதாரத்தில் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தினை விரைந்துசெயல்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். 562 வாக்குறுதிகளில் தற்போதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளார்கள். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்டமனுக்களைமுதல்வராக பதவியேற்றதும் அதற்கென தனிஅதிகாரியை நியமித்து அந்தந்த மாவட்டங்களில்.பெறப்பட்ட மனுக்களின் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்றுவருகிறார்கள். அதிக வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக நலத்துறையின் மூலம் மேலும் தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. பெண்களின்வாழ்வில் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனி பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கை மனுக்களை போட்டார்கள். 100 நாட்களில் இந்த மனுக்களுக்கு தீர்வுகாணப்படும் எனஅறிவித்தார்கள். பெறப்பட்ட மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பிமனுக்கள் மீதுநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

அதனடிப்படையில் இன்றையதினம் தையல் இயந்திரம் வேண்டும் எனமனுக்கள் அளித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காலத்தில் மக்களை பாதுகாக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுபெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்படும் எனஅறிவித்தார்கள். அதனடிப்படையில் இன்றையதினம் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்குநிதி உதவிவழங்கப்படுகிறது. தமிழக அரசின் மூலம்; மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சு.கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சுப்புலட்சுமி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலர் (சமூகநலத்துறை) தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, முக்கியபிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஜீவன், தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், ராமஜெயம், பில்லா ஜெகன், வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Sep 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  3. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  4. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  6. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  9. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  10. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு