/* */

ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி, பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

தூத்துக்குடியில் ஆசிரியரிடம் ரூ 50 ஆயிரம் பணத்தை மோசடி செய்த போலீ நிறுவனத்திடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு அசத்தினர்.

HIGHLIGHTS

ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி, பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்
X

தூத்துக்குடியில் ஆசிரியரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்த மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்..

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சேர்ந்த பாலசிங் மகன் ஆபிரகாம் ஆனந்தகுமார் (43) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 25.04.2021 அன்று காலை சுமார் 8 மணியளவில் தனது செல்போனிலிருந்து 'போன்பே" (PhonePe) மூலமாக ரூபாய் 1999/-க்கு செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தபோது, அவரது வங்கி கணக்கிலிருந்து மேற்படி பணம் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் மேற்படி பணம் ரீசார்ஜ் ஆகவில்லை.

ஆகவே பணம் போய்விட்டதே என்ற பதட்டத்தில் மேற்படி ஆபிரகாம் ஆனந்தகுமார் இணையதளத்தில் 'போன்பே" (PhonePe) என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை தேடும்போது (Search) அசல் போன்பே" (PhonePe) என்று நினைத்து தவறுதலாக, அதில் வந்த போலியான வாடிக்கையாளர் சேவை மையத்தை தேர்வு செய்து, அதன் உள்ளே சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் அலைபேசி எண். 9832752959ஐ தொடர்பு கொண்டு தன்னுடைய பணம் போய்விட்டது.

ஆனால் ரீசார்ஜ் ஆகவில்லையென அந்த போலி சேவை மைய வாடிக்கையாளரிடம் கூற, அவர் ஆபிரகாம் ஆனந்தகுமாரிடம் அனைத்து வங்கி கணக்கு விபரங்களையும் பெற்றுக் கொண்டு, உங்கள் மொபைலுக்கு ஒரு ஓ.டி.பி வரும் என்றும், அது வந்த உடன் அதை சொல்லுங்கள் என்று கூற, இவர் அந்த ஓ.டி.பி எண்ணை கூறிவிட்டார். உடனே அவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 49,578/- எடுக்கப்பட்டுவிட்டது. இதை அறிந்த ஆபிரகாம் ஆனந்த குமார் உடனடியாக 2 மணி நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். இது குறித்து அவர் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலியான வாடிக்கையாளர் சேவை மையம் என்ற பெயரில் ஆபிரகாம் ஆனந்தகுமாரிடம் பேசிய மர்ம நபர் மோசடி செய்யப்பட்ட பணத்தை /ப்ரீசார்ஜ்" என்ற பணப்பை ("Freecharge என்ற Wallet) நிறுவனத்தின் மூலம் எடுக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி நிறுவனத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், மோசடியாக ஆபிரகாம் ஆனந்தகுமார் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க பயன்படுத்திய போலியான வங்கி கணக்கை முடக்கம் செய்து மேற்படி பணம் ரூபாய். 49,578/-ஐ உடனடியாக அவரது வங்கி கணக்கிற்கே திருப்பியனுப்பிவிட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களுக்கு தெரிவிப்பதாவது, வங்கி அதிகாரிகள் பேசுவதாகவோ, கடன் தருவதாக கூறியோ, உங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைத்து தருவதாகவோ, பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறியோ, பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறியோ, வேலை வாய்ப்பு தருவதாக கூறியோ உங்கள் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் (OTP) ஒருமுறை கடவுச்சொல் எண்ணை எக்காரணம் கொண்டும் யாரிடமும் கொடுக்கக்கூடாது.

மேலே குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் ஆபிகாம் ஆனந்தகுமார் என்பவர் பணம் போய்விட்டதே என்ற பதட்டத்தில் இணைய தளத்தில் சரியாக பார்க்காமல் போலியான வாடிக்கையாளர் சேவை மையத்தை தேர்வு செய்ததோடு மட்டுமல்லாமல் அவரது வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி எண்ணையும் கொடுத்துள்ளதால் மட்டுமே அவரது பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காலதாமதம் செய்யாமல் 2 மணி நேரத்தில் புகார் அளிதத்தால், அவரது பணத்தை காவல்துறையால் திரும்ப பெற்றுக் கொடுக்க முடிந்தது. ஆகவே பொதுமக்கள் இதுபோன்று சைபர் குற்றங்கள் மூலம் உங்களது வங்கி கணக்கில் மோசடி செய்யப்பட்டால் உடடியாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 'ஹலோ போலீஸ்" என்ற 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் நூதனமாக சைபர் குற்றம் மூலம் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுக்கொடுத்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 7 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!