/* */

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு..

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு..
X

தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, பெரியதாழை, ஆலந்தலை, தருவைகிகுளம், வேம்பார் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து கடலுக்கு செல்லக்கூடிய 5000-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமான தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

வானிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடியில் மிதமான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும், வங்க கடலில் ஏற்பட்டிருக்கின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறி வட தமிழ்நாட்டு கரையோரம் கரையை கடக்க இருக்கிறது.

இன்றைய வானிலை மாற்றத்தில் தூத்துக்குடியில் மிதமான மழை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இனிவரும் நாட்களில் அதிகமாக மழை பெய்யும் பட்சத்தில் தூத்துக்குடியில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதனை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 36 இடங்கள் மழைநீர் அதிகமாக தேங்கக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு, அங்கே பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

அந்த 36 இடங்களிலும் கிட்டத்தட்ட 5 இடங்கள் அதிகமாக மழை நீர் தேங்கக் கூடிய இடங்கள் என்று கண்டறியப்பட்டு அந்த இடங்களிலும் நிவாரண நடவடிக்கைகளுக்காக முன்னெச்சரிக்கையாக அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் பட்சத்தில் அங்குள்ள மக்களை தங்க வைப்பதற்காக 97 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிவாரண மையங்களுக்கு பல்வேறு துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து நிவாரண மையங்களில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்து உள்ளனர்.

அதேபோல் மற்ற துறைகளான நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலைகளில் பள்ளங்கள் இருந்தால் அவை உடனடியாக மூட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டும், 400-க்கும் மேற்பட்ட குளங்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

647 குளங்கள் இருக்கின்ற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும், வரத்து கால்வாய், போக்கிட கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி வைத்து இருக்கின்றோம். மேலும் ஆற்றுப் படுகை மற்றும் கண்மாய்களின் கரைகள் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த தன்னார்வலர்களைக் கொண்டு பேரிடர் கால நண்பன் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயிற்சிகளும்,பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய முக்கியமான பணி மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தால் அந்தப் பகுதிகளில் இருக்கின்ற மக்களை உடனடியாக நிவாரண மையங்களுக்கு அழைத்து வருவது ஆகும்.

மீனவர்களைப் பொறுத்தவரை மீன்வளத் துறை, வருவாய்த்துறை மற்றும் கடலோர காவல்த்துறை ஆகியோர் மூலம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளார்கள். ஆழ்கடல் மீனவர்களுக்கும் சரியான எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Updated On: 8 Dec 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  4. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  5. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?