/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் இலக்கை தாண்டி ரூ.14,561 கோடி கடன்: கனிமொழி எம்.பி. தகவல்

தூத்துக்குடியில் 2020-21ம் ஆண்டில் ரூ.12084 கோடி கடன் இலக்கை தாண்டி, ரூ.14,561 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது-கனிமொழி எம்பி.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் இலக்கை தாண்டி ரூ.14,561 கோடி கடன்: கனிமொழி எம்.பி. தகவல்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 2021-2022ம் ஆண்டுக்கான பல்வேறு வகையான திட்டங்கள் குறித்த அறிக்கை புத்தகத்தினை எம்பி கனிமாெழி வெளியிட்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டில் ரூ.12084 கோடி கடன் என்ற இலக்கை தாண்டி, ரூ.14,561 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 2021-2022ம் ஆண்டுக்கான விவசாயம், தொழில், கல்வி, அந்நிய செலவாணி, மனை மற்றும் பல்வேறு வகையான திட்டங்கள் குறித்த அறிக்கை புத்தகத்தினை தூத்துக்குடி எம்பி கருணாநிதி வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தூத்துக்குடியில் கரோனா பெருந்தொற்று காரணமாக வங்கியாளர்கள் தங்களது இலக்கை அடைய முடியாத சூழ்நிலை பொதுவாக அனைத்து இடங்களிலும் நிலவி வருகிறது. கடந்த 2020-21ம் ஆண்டில் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.12084 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ரூ.14,561 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இலக்கானது 120.49 சதவீதம் அதிகம் ஆகும். தற்பொழுது இலக்கை தாண்டியும் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களை மேம்படுத்த உதவுகிறது. இன்னும் அடுத்த முறை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் கிராமப்புறங்களில் வங்கியின் சேவை கிடைப்பதன் மூலம் கிராமத்தை வளர்ச்சி அடைய செய்வதற்காக 1969ல் தொடங்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள் செயல்பட்டு வருகிறது.

மற்ற மாவட்டங்களைவிட தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியாளர்களின் பங்கு பாராட்டக்கூடிய அளவில் உள்ளது. பெண்கள் தங்கள் சுய முயற்சியில் முன்னேற பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் பல வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். கிராமப்புறத்தில் உள்ளவர்கள் மற்ற நாடுகளில் உள்ள தொழில்களை பற்றியும் அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் இத்திட்டத்தின் மூலம் எளிதாக பயன்பெற முடிகிறது. பொதுவாக தாங்கள் மற்றவர்களிடம் வேலை செய்வதைவிட தாங்கள் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.

அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரியும். அனைவரும் முன்னேறும் வகையில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து தர வங்கியாளர்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார். உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஸ்வர்னலதா மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!