/* */

புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது: 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

தூத்துக்குடி சிதம்பரம்நகர் பகுதியில் நகை கடையை துளையிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது: 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு
X

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள்.

தூத்துக்குடியில் நகை கடையின் சுவற்றில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி நகைகள் திருடிய 4 பேரை 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் முருகன் இவர் சிதம்பரம் நகர் பிரதான சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல வியாபாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டுக்கு சென்ற முருகன் திங்கள்கிழமை காலை கடையை திறந்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க சுவரில் துளையிட்டு கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சோதனை செய்தபொது கடையின் பின் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் உள்ள சூலாயுதத்தை எடுத்து சுவற்றில் துளையிட்டு கடைக்குள் சென்று நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தென்பாகம் போலீசார் கடை மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடையில் இருந்த 3 கிலோ வெள்ளி மற்றும் 2 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் சிசிடிவு உதவியால் நகை திருட்டு தொடர்பாக தூத்துக்குடி லோகோ நகரை சேர்ந்த முனியசாமி வயது இருபத்தி நான்கு, பிரையண்ட் நகர் 4வது தெருவில் சேர்ந்த சதீஷ் வயது 20, லெவிஞ்சிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சுடலையாண்டி வயது 29, மற்றும் 17 வயது இளம் சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருட்டு சம்பவம் நடந்த 4 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்த போலிசாருக்கு மாவட்ட கண்காணிப்பு பலர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 19 April 2022 2:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...