/* */

மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: எம்எல்ஏ வழங்கல்

மருத்துவ படிப்புக்கு தேர்வான கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ கலைவாணன் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

HIGHLIGHTS

மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: எம்எல்ஏ வழங்கல்
X

மருத்துவ படிப்புக்கு தேர்வான கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ கலைவாணன் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

2021 நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற, பழவநல்லூர் கிராமத்தை சேர்ந்த இரட்டையர்கள் பிரதாப் மற்றும் பிரதீப் சேலம் மற்றும் நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகி உள்ளனர்.

இந்த இரு மாணவர்களும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்று தங்க நாணயத்தை பரிசாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் இந்த இரு மாணவர்களின் சாதனையை பாராட்டி ரூ 50ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கினார். மேலும் அந்த இரு மாணவர்களுக்கும் மருத்துவர்கள் அணியும் மருத்துவ சீருடை மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து தங்கள் பள்ளியில் பயின்று முதல்முறையாக நீட் தேர்வில் தங்கள் பள்ளியின் சார்பில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் படிக்க உள்ள மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இணைந்து செல்போன் பரிசாக வழங்கினர். மாணவர்களின் நீட் தேர்வுக்கு ஊக்குவித்த தாவரவியல் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் இருவரும் தங்களுக்கு உதவிய ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர், பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கேசவன் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Feb 2022 10:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்