/* */

திருவாரூர் பள்ளிகளில் வ.உ. சிதம்பரனார் நகரும் புகைப்பட கண்காட்சி

வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் வந்தது.

HIGHLIGHTS

திருவாரூர் பள்ளிகளில் வ.உ. சிதம்பரனார் நகரும் புகைப்பட கண்காட்சி
X

திருவாரூருக்கு வந்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகன கண்காட்சி கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வராலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், நகரும் புகைப்பட கண்காட்சி வாகனம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்தொடர்ச்சியாக திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் வேலுடையார் பள்ளிக்கு இன்று நகரும் புகைப்பட கண்காட்சி வாகனம் வந்தடைந்தது. இந்த வாகனத்தில் இருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு, அங்கிருந்த வ.உ.சியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி குறித்து அறிந்து கொண்டனர்.

இந்த வாகனம் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு பயணித்து அனைத்து பள்ளிகளுக்கும் செல்கின்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேவா, நகர மன்றத் தலைவர் புவனப்பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2022 1:55 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு