/* */

மண்ணெண்ணையுடன் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மண்ணெண்ணையுடன் வந்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

மண்ணெண்ணையுடன் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி
X

திருவாரூர் மருதபட்டினம் பகுதியை சேர்ந்த காமாட்சி (32) என்ற மாற்றுத்திறனாளி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் (65) என்ற கணவரும், சீதளா தேவி (10),ஐயப்பன் (5) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வரும் காமாட்சி, வறுமை நிலை காரணமாக ஆறு மாதமாக வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை. அதனால், வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி வெளியே துரத்தியதால் வேறுவழியின்றி பேருந்து நிலையத்திலேயே வசித்துவருகிறார்.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் வேறு நபர் மூலம் காமாட்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என காமாட்சி தெரிவித்தார். தனக்கு தங்குவதற்கு இடம் ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார்.

அப்பொழுது அவரது கையில் மண்ணெண்ணையுடன் இருப்பதை கண்ட காவல்துறையினர் உடனடியாக அதை பறித்துச் சென்றனர் .இதனால் அவரின் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிம் கேட்டபோது அவருக்கான உதவிகள் உடனடியாக செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Updated On: 19 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...