/* */

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளை தெருவில் நடமாட விட்டால் அபராதம்

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கால்நடைகளை தெருவில் நடமாட விட்டால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளை தெருவில் நடமாட விட்டால் அபராதம்
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்ப்போர், அவற்றை பொது இடங்களில் நடமாடவிடாமல் அவர்களது குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் பொது இடங்களிலும்,சாலைகளிலும் காணப்பட்டால் அவற்றைபிடித்து தங்கள் பொறுப்பில் ஓரிடத்தில் அடைத்து வைக்க நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கும் காவல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் உரிய அபராத தொகை செலுத்திய பின்பே கால்நடைகளை மீட்டுச்செல்ல இயலும்.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் நடமாடவிடாமல், பொதுமக்களுக்கு கால்நடைகளால் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், தங்கள் குடியிருப்பு பகுதியிலேயே அடைத்து வைத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த அறிவுரைகளை மீறி கால்நடைகளை பொது வெளியில் விடுபவர்கள் அபராததொகை செலுத்த நேரிடுவதோடு சட்டப்படியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Oct 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்