/* */

திருவாரூர் அருகே கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்
X

திருவாரூர் அருகே கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்( 32) இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு சுதா என்கிற மனைவி மற்றும் இரணியன் என்கிற ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குமரேசன் திருவாரூரிலிருந்து கானூர் கிராமத்தை நோக்கி நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து தாலுகா போலீசார் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அகரத்திருநல்லூர் கிராமத்தில் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருவாரூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை மறியல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. இதனால் திருவாரூர்- கும்பகோணம் இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் சம்பவ இடத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Updated On: 15 Nov 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...