/* */

திருவாரூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து 3000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அண்மையில் 150 சதவீதம் வரையிலான சொத்து வரி உயர்வை தற்போதைய திமுக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக தலைமை மாநிலம் தோறும் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.

அதன்படி இன்றைய தினம் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடக் கூடாது, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் ,குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு துணை போகக் கூடாது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம் ,நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல் ,மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2022 12:36 PM GMT

Related News