/* */

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவியருக்கான சேர்க்கை துவக்கம்

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2021-22 ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியருக்கான சேர்க்கை துவங்கபட்டுள்ளதாக கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி  மாணவியருக்கான சேர்க்கை  துவக்கம்
X

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளி பிளாட் 41, வாசன் நகர், திருவாரூர் என்ற முகவரியில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் மிகச்சிறப்பாக மூன்று வருட முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400 - (ரூபாய் நானூறு மட்டும்) வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. ஆண்டு ஒன்றுக்கு கல்வி கட்டணம் ரூ. 152- செலுத்தவேண்டும். தற்போது மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் மேலும் விவரங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, திருவாரூர் என்ற முகவரியில் அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்