/* */

தேனி :பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க Women Help Desk திட்டம் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள உதவி மையங்களில் பயிற்சி பெற்ற பெண் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் 181, குழந்தைகள் 1098 ஆகிய இலவச தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்

HIGHLIGHTS

தேனி :பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க Women Help Desk  திட்டம் தொடக்கம்
X

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 'Women Help Desk' திட்டம் தொடங்கப்பட்டது

தேனி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 'உமன் ஹெல்ப் டெஸ்க்' என்ற திட்டத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார் .

தேனி மாவட்டம், வீரபாண்டி காவலர் சமுதாய மண்டபத்தில் பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் ஆகியவர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க தேனி மாவட்ட காவல்துறை மற்றும் ஏ.ஹைச்.எம். டிரஸ்ட் இணைந்து ''Women Help Desk'' என்ற திட்ட பயிற்சி முகாமை நடத்தினர்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ், திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்., பிரச்சினை நடைபெறும் இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும். தவறு செய்தவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் உதவி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் 181, குழந்தைகள் 1098 ஆகிய இலவச தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்க வேண்டும் என பேசினார். இப்பயிற்சி முகாமில் கூடுதல் எஸ்.பி.க்கள் ராஜேந்திரன், சங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 11 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்