/* */

குமுளி மலைப்பாதையில் பேரிடர் மீட்புக்குழு ஆய்வு

தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப்- குமுளி மலைப்பாதையில் பேரிடர் மீட்புக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

குமுளி மலைப்பாதையில் பேரிடர் மீட்புக்குழு ஆய்வு
X

குமுளி மலைப்பாதையில் பேரிடர் மீட்புக்குழுவினர்.

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த சீசனில் குமுளி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை தேவாரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.

இதனால், தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் குமுளி வரை உள்ள மலைப்பகுதியில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லோயர் கேம்ப் குமுளி மலைப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் கணேஷ் பிரசாத், சப் இன்ஸ்பெக்டர் உமேஷ் கண்டி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

மண் சரிவு, வெள்ளப்பெருக்கு அபாயம், பாறைகள் உருண்டு விழும் அபாயம், மரங்கள் சாயும் அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் என்ன மாதிரி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

இந்த ஆய்வின் போது கூடலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், உத்தமபாளையம் தாசில்தார் உதய ராணி, வருவாய் துறை ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் முருகன் உடன் இருந்தனர்.

Updated On: 22 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு