/* */

தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் அமைச்சர் மகேஷ் பொய்யமொழி

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் விருப்பமுள்ளவர்கள் பணியாற்ற வரலாம் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார்.

HIGHLIGHTS

தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் அமைச்சர் மகேஷ் பொய்யமொழி
X

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை கட்டாயமப்படுத்த மாட்டோம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார்.

கொரானா நோய் தொற்றும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக்குப் பின் பேட்டி அளித்த அமைச்சர். கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் விருப்பமுள்ளவர்கள் பணியாற்ற வரலாம் என்று தெரிவித்தார்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இருக்கிறது. தேவைப்படும்போது சுகாதார துறையிடம் இருந்து கேட்டு பெற்று தரப்படும்.

தனியார் பள்ளியில் பாலியல் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து .உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பள்ளி அங்கீகாரம் தொடர்பாக மத்திய அரசுதான் பதில் தெரிவிக்க வேண்டும் என்றார். தஞ்சை மாவட்டத்தில் போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளது. தடுப்பூசிகள் தட்டுபாடு ஏதுமில்லை இதனை செலுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது இதர சிகிச்சைகளுக்கும் காப்பிடு பயன்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

Updated On: 26 May 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்