/* */

எளிமையாக நடைபெற்ற பெருவுடையார் திருக்கல்யாணம்

தஞ்சை பெரிய கோவிலில், பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் திருக்கல்யாணம், பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

HIGHLIGHTS

எளிமையாக நடைபெற்ற பெருவுடையார் திருக்கல்யாணம்
X

தஞ்சை பெரிய கோவிலில், பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் திருக்கல்யாணம்.

தஞ்சை பெரிய கோவிலில், பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் திருக்கல்யாணம், பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில், ஆண்டுதோறும் பெருவுடையாருக்கும், பெரியநாயகியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவும் என்பது ஐதீகம்.

மேலும், பக்தர்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை, சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக, தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தநிலையில், பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபோகம், அனைத்து சம்பிரதாயங்களுடன் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக நடந்தது. இதில், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jun 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்