/* */

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை
X

பைல் படம்

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் கீழ் கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித் தொகைத் தளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் (OBC, EBC & DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது, 2023-24 ஆம் ஆண்டிற்கு https://scholarships.gov.in/public/FAQ/topclass_schoollist_2211_compressed.pdf_ என்ற இணைய முகவரியில் வெளியிடப் பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்சகட்ட வருமான வரம்புரூ.2.5 இலட்சம் ஆகும் .இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக் கடைசி நாள் 31.12.2023. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் 15.01.2024

புதுப்பித்தல்:

இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசியகல்வி உதவித் தொகை தளத்தில் (National Scholarship Portal) RenewalApplication என்ற இணைப்பில் (link) சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24 ஆம்ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதியது: இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் புதியதாகவிண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம்வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப்படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித் தொகைத் தளத்தில் (National Scholarship Portal) New Registration என்ற

இணைப்பில் (link) சென்று தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறும் பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் பதிவுகளை Fresh Applicationஎன்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட NationalScholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும்அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in)அணுகி கல்விஉதவித் தொகை பயன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Dec 2023 4:15 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை