/* */

பேருந்தில் திருநங்கைகளுக்கும் இலவசம்

தமிழக அரசு நகர பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம் என அறிவித்திருந்த நிலையில், திருநங்கைகளுக்கும் கட்டணம் வசூலிக்காததது மகிழ்ச்சி அளிப்பதாக திருநங்கைகள் நெகழ்ச்சி.

HIGHLIGHTS

பேருந்தில் திருநங்கைகளுக்கும் இலவசம்
X

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை அடுத்து முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணிக்க கட்டணம் இல்லை என அறிவித்ததை அடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள 95 தஞ்சை நகர பேருந்துகள் மற்றும் 230 தஞ்சை மாவட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராமப்புறங்களில் இருந்து கடைகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு கட்டிட வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் தினமும் தங்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மிச்சமாகும் எனவும், பள்ளி கல்லூரி மாணவிகள் இந்த சலுகை மிக பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் நடத்துநர்கள் பெண்களுக்கு அளிக்கும் சலுகையை பேருந்துகளில் தங்களுக்கும் அளிப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் திருநங்கைகள் தங்களுக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் வரை மிச்சம் ஆவதாகவும், மேலும் தமிழக அரசு நிவாரண தொகை 4 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது.

திருநங்கைகள் பெரும்பாலானோருக்கு குடும்ப அட்டை இல்லாத நிலையில் திருநங்கை நலவாரியம் மூலம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணத்தொகை தங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 8 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்