/* */

விவசாயிகளுக்கு இடுபொருள்- ரொக்கம் 25 ஆயிரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உரத்தட்டுப்பாடு காரணம் காட்டி மோசடி நடைபெற்று வருகிறது. தமிழகமுதல்வர் தலையிட்டு விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு இடுபொருள்- ரொக்கம்  25 ஆயிரம் வழங்க  விவசாயிகள் வலியுறுத்தல்
X

உரத்தட்டுப்பாடு காரணம் காட்டி மாபெரும் மோசடி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகமுதல்வர் தலையிட்டு விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன்.

தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் பேசியதாவது:மத்திய அரசு தனக்கு சொந்தமான உணவு கிடங்குகளை அம்பானி நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு விட்டதாக தகவல் வருகிறது. இதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். உணவு துறை செயலாளர், மத்திய அரசு நெல்மணிகளை கொள்முதல் செய்யாது என கூறியதாக அதிகாரமற்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு பருத்தி கொள்முதல் செய்வதை கைவிட்டு விட்டதாக ஒரு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மீண்டும் பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு தனக்கு சொந்தமான உணவு கிடங்குகளை அம்பானி நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு விட்டதாக தகவல் வருகிறது. இதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு சம்பா நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும். உரத்தட்டுப்பாடு காரணம் காட்டி மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் விவசாயிகள் நலனை பாதுகாக்க முன்வர வேண்டும். உரத்தின் விலையை விற்பனையாளர்கள் தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் மற்றும் இழப்பீடு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


Updated On: 19 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  2. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  3. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  4. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  5. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  6. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  9. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!