/* */

அரசு வேளாண் பண்ணைகளின் தின கூலிகளை வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது

ஏஐடியூசி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

அரசு வேளாண் பண்ணைகளின் தின கூலிகளை  வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது
X

அரசு வேளாண்துறை பண்ணைகளில் தின கூலியாக பணிபுரிபவர்களை வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாதுஎன பண்ணை சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஏஐடியூசி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஏ ஐ டி யூ சி அலுவலகத்தில் சங்க தலைவர் சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பண்ணை சங்க மாநில பொதுச் செயலாளர் உ.அரசப்பன் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை பண்ணைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை வயதை காரணம் காட்டி வேலை வழங்க மறுக்கும் நிர்வாகத்தின் போக்குகள் பற்றி விரிவாக பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் எஸ். பி. ராதா, ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள் ஆர்.பானுமதி, நா. குணசேகரன்,. எஸ்.பருத்திவேல், சி.வெள்ளைச்சாமி, வி.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் விதை பண்ணைகள்,. எண்ணெய் வித்து பண்ணைகள்,. பயறு வகை பண்ணைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது இவர்களுக்கு 60 வயது ஆகிவிட்டது என்ற காரணத்தை கூறி பண்ணை நிர்வாகங்கள் வேலை வழங்க மறுக்கின்றன.

இந்த தொழிலாளர்கள் மாத சம்பளம் வாங்கும் அரசு பணியாளர்கள் அல்ல, தினந்தோறும் தங்கள் உடல் உழைப்பை செலுத்தி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் தொழிலாளர்கள் ஆவார்கள். தற்போது இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதால் இவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு தொடர்ந்து இவர்கள் வேலை பார்த்து வரும் பண்ணைகளில் பணிபுரிய பண்ணை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டுமென்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

Updated On: 11 March 2023 5:15 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்