/* */

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடர்பாக மாநகராட்சி நோட்டீஸ்

தகவல்களை மறைத்து 16வது வார்டில் வென்றுள்ள திமுக எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகத்தின் அக்கா மகன் அண்ணா.பிரகாஷுக்கு நோட்டீஸ்

HIGHLIGHTS

உள்ளாட்சி  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடர்பாக மாநகராட்சி நோட்டீஸ்
X

தஞ்சாவூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் அண்ணா.பிரகாஷ்

உள்ளாட்சி சாதாரண தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடர்பாக எம்எல்ஏ அக்கா மகனிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகம். இவரது அக்கா மகன் அண்ணா.பிரகாஷ் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 16வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடு வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கவுன்சிலராக போட்டியிடக் கூடியவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்ககூடாது. மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் உள்ளது.

அண்ணா.பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். அதனை அவர் மறைத்து மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல் பட்டவரும், மாநகராட்சி கமிஷனருமான சரவணக்குமார் அண்ணா.பிரகாஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.அவருடைய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் அண்ணா.பிரகாஷ் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்டுவார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், எந்த மாநகராட்சி பணிகளையும் ஒப்பந்தம் எடுத்து செய்திருக்க கூடாது, அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தில் கீழ் செயல்படுகிற கடைகளை டெண்டர் எடுத்து நடத்தக் கூடாது. வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் பலர் மாநகராட்சி மூலமாக வருவாய் ஈட்டக்கூடிய பல்வேறு செயல்களில் ஈடுப்பட்டதை அறிந்து மனுக்கள் பரிசீலனையின் போது அவர்களது மனுக்களை நிராகரித்தார். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

16வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகத்தின் அக்கா மகனான அண்ணா.பிரகாஷின் தம்பி ராம்பிரசாத் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தன்னுடைய வேட்புமனுவில் அதனை மறைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து கமிஷனர் சரவணக்குமார், திமுக கவுன்சிலரான அண்ணா.பிரகாஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அவருடைய விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். கவுன்சிலர் பதவி பறிக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட அந்த 16 வது வார்டில் இடைத்தேர்தல் நடப்பதற்கான சூழல் ஏற்படும். இதே காரணத்திற்கு அங்கு வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மாற்று வேட்பாளர் தேர்தலில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 March 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...