/* */

1கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி: தண்ணீர் ஊற்றும் முன்னே கசிந்தது

நான்குபுறமும் வீடுகள் உள்ளதால், தொட்டி இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

HIGHLIGHTS

1கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி: தண்ணீர் ஊற்றும் முன்னே கசிந்தது
X

தஞ்சை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே தண்ணீர் கசிவதாகவும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 - வது வார்டில் புதிய வீட்டு வசதி வாரியம் நேதாஜி நகரில் சுமார் மூன்று வார்டுகள் பயன்பெறும் வகையில், ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 2014ஆம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு, 2017 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக நீர்த்தேக்கத் தொட்டியின் நான்கு புறமும் மழை நீர் கசிந்து வடிந்து வருகின்றன. மேலும் தொட்டியின் மேல் தளத்தில் பூசப்பட்டுள்ள சிமெண்ட் பூச்சிகள் ஆங்காங்கே சிதலமடைந்து வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ள பகுதியில் நான்குபுறமும் வீடுகள் உள்ளதால், தொட்டியில் மழைநீர் கசிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த குடிநீர் தொட்டியில் குடிதண்ணீர் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், மழைநீர் தேங்கியே தொட்டி கசிந்து வருகின்றன. இன்னும் தொட்டி முழுவதும் குடி தண்ணீர் நிரப்பப்பட்டு, தண்ணீர் கசிந்தால், எந்த நேரமும் தொட்டி இடிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது என அச்சத்தோடு தெரிவிக்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம், இதனை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.


தேங்கியிருக்கும் மழைநீர் கசிந்து வரும் காட்சி.


Updated On: 27 Aug 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு