/* */

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு

ஆக்சிசன் இல்லாமல் நான்கு பேர் இறந்ததாக கூறுவது உண்மையில்லை...

HIGHLIGHTS

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு
X

தஞ்சையில் ஆக்சிசன் இல்லாமல் 4 பேர் உயிரிழந்ததாக கூறுவது உண்மையில்லை எனவும் தேவையானவர்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டு ஆக்சிசன் நல்ல முறையில் கையாள பட்டு வருவதாக இன்று ஆய்வு செய்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அதி தீவிர சிகிச்சை பிரிவு 6 வது வார்டில் 40 படுக்கைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணியில் மருத்துவர்கள் இல்லாமல் பயிற்சி செவிலியர்கள் மட்டுமே கண்காணித்து வருவதாகவும் இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் 4 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.

அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் தந்தை அப்துல்காதர் தனது மகனுக்கு ஆக்சிஜன் வரவில்லை என புகார் அளிக்க சென்ற போது அதே நேரத்தில் 4 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை நகர செயலாளர் ஆன அப்துல் காதர் கூறியிருக்கிறார் இந்நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று கொரோனா சிகிச்சை மையங்களை ஆய்வு செய்தார்

அப்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஆக்சிசன் தேவையானவர்களுக்கு தேவையான அளவு வழங்கி ஆக்சிசன் ஆடிட் செய்யப்பட்டு நல்ல முறையில் கையாளப்பட்ட வருவதாகவும் ஆக்சிசன் இல்லாமல் நான்கு பேர் இறந்ததாக கூறுவது உண்மையில்லை எனவும் அவர் மறுப்பு தெரிவித்தார்.

Updated On: 12 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...