/* */

தென்காசியில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீஸ் கடத்தல்: இருவர் கைது

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக ரூ.3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கல கழிவினை கடத்திய இருவர் கைது

HIGHLIGHTS

தென்காசியில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீஸ் கடத்தல்: இருவர் கைது
X

வாகன சாேதனையின் போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீஸ்.

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர் கைது

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கற்பக ராஜா மற்றும் காவலர்கள் சவுந்தர் ராஜன், இசக்கிமுத்து ஆகியோர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், வாகனத்தில் சென்னையிலிருந்து சுமார் 3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை சுமார் 21 கிலோ எடை கொண்ட கட்டிகளாக விற்பனைக்காக கொண்டுவந்த கன்னியாகுமரி குலசேகரத்தினை சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்ரோஸ் மற்றும் திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் வசம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் முதலியவை ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவு பொருட்களின் மதிப்பு சுமார் 3.5 கோடி ஆகும்.

Updated On: 4 Jan 2022 2:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்