/* */

சுரண்டையில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு

சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

சுரண்டையில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு
X

சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சுரண்டை 27 வார்டுகள் கொண்ட புதிய நகராட்சி பகுதி. இங்குள்ள 27 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தனித்து போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் சுரண்டை நகராட்சி பகுதிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட வருகை தந்த அவருக்கு தென்காசி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தின் போது சுரண்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வள்ளி முருகன், உட்பட மற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு விஜய் வசந்த் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 16 Feb 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...