/* */

குற்றாலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: வியாபாரிகள் வாக்குவாதம்

குற்றாலத்தில் வாடகை பாக்கி தராத கடைகளுக்கு சீல். வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

குற்றாலத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: வியாபாரிகள் வாக்குவாதம்
X

குற்றாலத்தில் வாடகை பாக்கி தராத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்று குற்றாலம். இந்த குற்றாலத்தில் குற்றாலநாதர் குழல்வாய்மொழி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு 150 வகையான கட்டிடம் மற்றும் காலி மனைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவிலுக்கு ஏராளமான வருவாய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் காலி மனைகள் இருந்து வாடகை பாக்கி மற்றும் குத்தகை பாக்கி கொடுக்கப்படவில்லை. இதனால் 5 கோடியே 88 லட்சத்துக்கும் மேல் வரி பாக்கி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாடகை பாக்கி மற்றும் குத்தகை பாக்கி கொடுக்காத கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கைகளில் இன்று காலை கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர்கள் கோவில் ஊழியரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோயில் ஊழியர்கள் 3 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்து விட்டுச் சென்றனர். கொரோணா காலத்தில் உள்ள வாடகை பாக்கியை மட்டும் கோயில் நிர்வாகம் தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Feb 2022 1:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்