/* */

குளத்தை ஆக்கிரமித்து தனியார் சொகுசு ரிசார்ட் ? கிராம மக்கள் எதிர்ப்பு

சுரண்டை அருகே குளத்து கன்மாய் நீர்பிடிப்பு பகுதியை தனியார் ரிசார்ட் ஆக்கிரமிப்பா? சர்வே செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு.

HIGHLIGHTS

குளத்தை ஆக்கிரமித்து தனியார் சொகுசு ரிசார்ட் ? கிராம மக்கள் எதிர்ப்பு
X

சுரண்டை அருகே குளத்து கன்மாய் நீர்பிடிப்பு பகுதியை தனியார் ரெசார்ட் ஆக்கிரமிப்பா? சர்வே செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு போலீஸ் குவிப்பு.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள இரட்டை குளத்தை அடுத்த உசிலங்குளம் கண்மாய் (புலஎண்:484) கரை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் சொகுசு ரிசார்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாரியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017ல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என சர்வே செய்ய வருவாய்த் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ் கண்மாய் பகுதியை சர்வே செய்ய அறிவுறுத்தினார். ஆகவே வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், குறுவட்ட அளவர் ஆகியோர் நேரில் சென்று சுரண்டை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் ஒத்துழைப்புடன் நிலஅளவைப் பணி மேற்கொள்ள முற்பட்டனர்.

அப்போது மாரியப்பன் தலைமையில் துரைச்சாமிபுரம் ஊர் பொதுமக்கள் சுமார் 100 பேர் திரண்டு வந்து நீர்பிடிப்பு பகுதியில் சுவர் கட்டுவதால் நீர் சேமிக்கப்படாமல் நிலத்தடிநீர் மட்டம் குறையும். விவசாய பணிகள் பாதித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் .

எனவே தனியார் ரிசார்ட் நிர்வாகத்தினர் சுவர் கட்டி நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் சேமிக்க முடியாமல் தடுப்பதற்காக சர்வே செய்ய ஆட்சேபணை தெரிவித்து மறியல் செய்தனர். இதனால் சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் வேல்சாமி, சாரதி தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தற்போது சர்வே செய்ய கூடாது என்றும், விரைவில் இப்பிரச்சனை தொடர்பாக தென்காசி கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள தீர்வுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 11 Aug 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!