/* */

நாளை குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நாளை குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாளை குற்றால அருவியில் குளிக்க அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
X

குற்றால அருவி.

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் ஒன்றான குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்த கால சூழ்நிலைகளில் குற்றால அருவியில் குளிப்பதற்கு வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கொரோனா பரவல் தடை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக குற்றால அருவியில் குளிப்பதற்கு உரிய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் குற்றாலத்தில் நம்பி வாழும் வியாபாரிகள் சுற்றுவட்டார கிராம மக்கள் வாழ்வாதாரம் இன்றி பெரிதும் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வருகின்ற 1 ஆம் தேதி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால அருவி திறப்பது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது பரவல் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்நிலையில், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பொறுத்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் போது அறிவிப்பு வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சிதத் லைவர் கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு குற்றாலத்தை சார்ந்து வாழும் வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு