/* */

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் முககவசம் கட்டாயம்

Wear Mask Stay Safe- தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் முக கவசம் அணியாவிட்டால் அபதாரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் முககவசம் கட்டாயம்
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்.

Wear Mask Stay Safe- கோவிட் - 19 நோய் பெருந்தொற்று பாதிப்பு தற்போது கணிசமாக உயரத் தொடங்கியுள்ள நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் ஆயுதமாக திகழ்ந்து வரும் தடுப்பூசி செலுத்துவது, பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது, அடிக்கடி சோப்பினை பயன்படுத்தி கை கழுவுதல், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ.500அபராதம் வசூலிக்கப்படும். அரசு தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து

மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துனர் கண்காணிக்க வேண்டும். இதனை அந்தந்த பணிமனை கிளை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து வித வியாபார மையங்களிலும், வாடிக்கையாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து மட்டுமே கடைக்கு வர அறிவுறுத்த வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும். திரையங்களுக்கு செல்வோர் முககவசம் அணிந்து வருவதை அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பொது நிகழ்வுகள் திருமண வைபவங்கள் மற்றும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.

மேலும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும்போது மக்கள் கோவிட் அறிகுறி தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் (Test) எடுத்துக்கொள்ள வேண்டும். பரிசோதனை முடியும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையோரும் உடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் கொரானா தடுப்பூசி முகாம்நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்.

மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆகிய இடங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருவதை பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களும் மற்றும் வணிக நிறுவனங்கள் கொரானா தொற்று பராவாமல் தடுக்க அரசின் நிலையான விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 5:29 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை