/* */

கடையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்லம்மாள் ராஜினாமா: ஆட்சியரிடம் கடிதம் வழங்கல்

கடையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்லம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

HIGHLIGHTS

கடையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்லம்மாள் ராஜினாமா: ஆட்சியரிடம் கடிதம் வழங்கல்
X

கடையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்லம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

தென்காசி மாவட்டத்தில் கடையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்லம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 வார்டுகளில் 10 வது வார்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் செல்லம்மாள் என்வர் இவரது கணவர் முருகன் ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினராக திராவிட முன்னேற்றக்கழகத்தில் உள்ளார். இவர் மனைவி திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் இன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் நேர்முக உதவியாளர் ஹெலனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதில் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே இந்த பகுதியில் வெற்றி பெற்ற ஜெயக்குமார் என்வரே தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் மறைமுக தேர்தலில் இவர் வெற்றிபெற்றார். இந்த நிலையில் மறைமுக தேர்தல் நிறைவடைந்து சில தினங்களில் திமுக ஒன்றிய செயலாளராக இருந்த குமார் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மறைமுக தேர்தலில் 13 பேர் வாக்களிக்க ஒன்றிய செயலாளர் காரணமாக இருந்ததால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் சிவபத்மனாபனிடம் கேட்ட போது அவர் ஏற்கனவே ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி தங்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுத்துவிட கூடாது என்பதற்காக ராஜினாமா செய்கிறார்கள் என கூறினார்.

Updated On: 29 Oct 2021 3:27 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்