/* */

தமிழகத்தில் வன்முறை தூண்டிவிடப்படுகிறதா? பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

தமிழகத்தில் வன்முறை தூண்டிவிடப்படுகிறதோ?என்கிற ஐயப்பாடு இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் வன்முறை தூண்டிவிடப்படுகிறதா?  பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
X

தென்காசி அருகே தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார் பீட்டர் அல்போன்ஸ்.

தென்காசி அருகே குத்துக்கல்வலசை பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் மாநில சிறுபான்மைத்துறை ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது:-

தமிழக முதல்வர் உடல் நலம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார். இது எங்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்ற அவர் பாடுபட்டு வருகிறார். கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மாணவி இறப்பிற்கு உரிய விசாரணையை தமிழக அரசு நடத்தும். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் வன்முறையை தூண்டி விட்டு அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இச்சம்பவம் தூண்டிவிடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

பள்ளி நடத்துபவர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட இருக்கும் மாணவர்களின் திறன், மனநிலையை பார்த்து செயல்பட வேண்டும்.தமிழகத்தில் உலக நாடுகள் தொழில் துவங்க வருகின்றனர். உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் ஒளிம்பியாட் செஸ் போட்டிகள் நடக்க இருக்கிறது.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்கு காரணமே நாம் மொழியால், இனத்தால், மதத்தால் பிளவுபடாமல் தமிழராய் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதற்குத்தான்.

தென்காசி புதிய மாவட்டம் இங்கு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்றவை செயல்படுத்த அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் சிறுபான்மை துறை பணிகளை மேற்கொள்ள தற்போது ஐந்து மாவட்டங்களுக்கு சிறுபான்மை நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு 5 வருடத்தில் தனி அலுவலர் நியமிக்கபடுவர் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை துறை மூலம் கடன் உதவி, கல்வி உதவித் தொகை, நலவாரியம், தேவாலய பணியாளர்கள் வாரியம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. தேவாலய பணியாளர்கள் வாரிய உறுப்பினர் அட்டைக்கான படிவம் அந்தந்த திருச்சபை தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் அந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் உறுப்பினர் அட்டை வழங்கும் பணி நடைபெறும் என்று அவர் கூறினார்.

Updated On: 19 July 2022 3:36 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!