/* */

ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம் தொடக்கம்

ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை( NSV ) வாசக்டமி இருவார விழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 04 வரை அனுசரிக்கப்படுகிறது

HIGHLIGHTS

ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை   விழிப்புணர்வு ரதம் தொடக்கம்
X

 ஆண்களுக்கான நவீன கருத்தடை வாசக்டமி விழிப்புணர்வு ரதத்தை தென்காசி இணை இயக்குனர் பிரேமலதா தொடங்கி வைத்தார்

ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை( NSV )வாசக்டமி இருவார விழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 04 வரை அனுசரிக்க தமிழக அரசின் குடும்ப நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின்படி ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதம் மாவட்டம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு வலம் வர இருக்கிறது.

ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி இணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மருத்துவர் போ.பிரேமலதா, குடும்ப நல துணை இயக்குனர் மருத்துவர் மு.இராமநாதன் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு ரதம் ஒலிபெருக்கி பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வினியோகித்தல் ஆகிய பணிகளை மாவட்டம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது.

பிரசாரத்தின் போது ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் (NSV ) வாசக்டமி சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. NSV - வாசக்டமி சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு அரசு சார்பில் ரூபாய் 1,100 வழங்கப்படுகிறது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் NSV சிகிச்சை அனைத்து வேலை நாட்களிலும் செய்யப்படுகிறது.

நவீன வாசக்டமி விழிப்புணர்வு ரதம் தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் எஸ்.எஸ்.ராஜேஷ், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் எஸ்.வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை மருத்துவர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மருத்துவர் ஸ்வர்ணலதா, மருத்துவர் கார்த்திக்,மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திரு.டேவிட் ஞானசேகர், புள்ளி விபர உதவியாளர் திரு.வேலு,வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள் ,செயின்ட் மேரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான குடும்ப நல(வாசக்டமி) சிகிச்சையின் சிறப்பம்சங்கள் : ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை மிகவும் எளிமையானது. பாதுகாப்பானது. பத்து நிமிடங்களில் பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் செய்யப்படுகிறது. மயக்க மருந்து கொடுப்பதில்லை. சிகிச்சைக்கு பின் இல்லற வாழ்க்கை எப்பொழுதும் போல் இருக்கும். மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை.அரசு ஈட்டுத்தொகை ரூபாய் 1100 வழங்கப்படும் . சிகிச்சைக்கு அழைத்து வரும் நபர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 200 வழங்கப்படும்.

ஆண்கள் ஏன் குடும்ப நல சிகிச்சை செய்ய வேண்டும்: மனைவிக்கு இதய நோய் இருந்தால், தீவிர ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு மற்றும் இரண்டு பிரசவங்களுமே அறுவை சிகிச்சையில் நடந்திருந்தால் அவர்களுக்கும், மூன்றாவதாக குடும்ப நல சிகிச்சை செய்ய இயலாதவர்கள் ஆகியோர்களின் கணவர்கள், தங்கள் மனைவியின் நலன் கருதி அவசியம் தாங்களே முன்வந்து குடும்ப நல சிகிச்சை(வாசக்டமி) செய்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை( NSV -வாசக்டமி) தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனைத்து வேலை நாட்களிலும் செய்யப்படுகிறது. தகுதியான ஆண்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு குடும்பநல சிகிச்சை செய்து கொள்ளுமாறு துணை இயக்குனர் குடும்ப நல மருத்துவர் மு.இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Nov 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...