/* */

தென்காசி மாவட்டத்தில் 64 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் 64 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 64 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அதிரடி நடவடிக்கையாக பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 64 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 87 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 45.775 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 31 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப்படும் 35 நபர்கள் மீது நன்னடத்தைப் பிணையம் வாங்கபட்டுள்ளது.

தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் உத்தரவின் பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் கடந்த மூன்று நாட்களில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 75.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் 1,95,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 28 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 17 Jun 2022 8:29 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  4. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்