/* */

கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 பேர் உயிரிழப்பு

குற்றாலம் தனியார் விடுதியில் மதுரையை சேர்ந்த தந்தை,மகள் விஷமருந்தி தற்கொலை, தாய் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

HIGHLIGHTS

கடன் தொல்லை காரணமாக  விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 பேர் உயிரிழப்பு
X

குற்றாலம் தனியார் விடுதியில் விஷம் அருந்தி மதுரையை சேர்ந்த தந்தை,மகள் தற்கொலை, தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குற்றாலம் காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி நுழைவு வாசல் எதிரே தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் கடந்த 30ம் தேதி இரவு மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்(55) தனது மனைவி காமாட்சி மகள் தன பிரியா உடன் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் விடுதி உரிமையாளர் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது தந்தை மகாலிங்கம் மகள் தன பிரியா கட்டிலில் இறந்து கிடந்த நிலையில் தாய் காமாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.இதனைதொடர்ந்து குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காமாட்சியை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தென்காசி தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இருவரின் உடலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், கடந்த 4மாதங்க ளுக்கு முன்னர் மகாலிங்கம் மகனும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றாலம் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு வரும் நிலையில் தந்தை,மகள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 3 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?